
நம்ப முடியாத அதே சமயம் மறுக்க முடியாத சில சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. அதனை சின்னத்திரைக்கு கொண்டு வரும் முயற்சிதான் சுழியம் நிகழ்ச்சி.
மே 4-ம் தேதி முதல் விஜய் டிவியில் புதிதாக தொடங்கவிருக்கும் இந்நிகழ்ச்சி, திங்கள் முதல் வியாழன் வரை தினமும் இரவு 7.30 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் பல திகிலூட்டும், மெய்சிலிர்க்க வைக்கும் உண்மைச் சம்பவங்கள் படக்காட்சிகளாக சித்தரிக்கப்பட்டு ரசிகர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது.
எப்படிப்பட்ட கதைகளை நீங்கள் எதிர்பார்த்திருப்பீர்கள்? உங்களால் யூகிக்க முடியுமா? ஒரு சாலை விபத்தில் மண்டை உடைந்து மூளை சிதறி உயிரிழந்தவரின் உடல் பிணக்கிடங்கில் வைக்கப்பட்டது. அதனை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவர்கள் எடுத்தபோது அந்தப் பிணத்தின் விரல் அசைவைப்பார்த்து அந்த உடலில் உயிர் இருப்பதை அறிந்தார்கள். உடனே சிகிச்சை அளித்து காப்பாற்றப்பட்ட அந்த மனிதரை நீங்கள் பார்க்க வேண்டுமா? அது மட்டுமல்லாமல் அவர் இறந்ததாக சொல்லப்படும் அந்த தருணத்தில் தன் உடலை தானே பார்த்ததாக கூறுகிறாரே, அதனை கேட்கவேண்டுமா? இது மருத்துவரீதியாக நடந்த உண்மை; இந்த உண்மைகளை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ள வருவதுதான் சுழியம் நிகழ்ச்சியின் நோக்கம்.
கட்டபொம்மன் காடு பற்றிய கதை தெரியுமா? கட்டபொம்மன் வாழ்ந்த ஊரில் ஒரு குதிரையில் ஊமைதுரை வலம்வந்து கொண்டிருந்தாராம். இதனைப் பார்த்தவர் அனுபவத்தை சுழியத்தில் சொல்கிறார்.
பல கதைகளை நம் தாத்தா பாட்டி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். எல்லாவற்றையும் நாம் நம்புவதும் இல்லை, அதே சமயம் மறுக்கவும் முடிவதில்லை. இவற்றுள் சிலவகைகளை அறிவுபூர்வமாகவும் விளக்க முடியும் என்பதை ஆதாரத்தோடு விவரிக்கவரும் நிகழ்ச்சிதான் விஜய் டிவியின் `சுழியம்'.
வாரம் ஒரு கதையுடன் களத்தில் இறங்கும் இந்த நிகழ்ச்சி வரும் திங்கட்கிழமை தொடங்குகிறது.
(நன்றி- வெப்துனியா,விஜய் டிவி)